News November 6, 2025

இசையமைப்பாளராக யாரு கரெக்ட்டா சாய்ஸ்?

image

ரத்தம், அதீத Violence இல்லாத ஒரு ரஜினி படம் 2027 பொங்கலுக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது. காமெடி, சென்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகப்போகும் ரஜினி- சுந்தர்.சி படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் ஹிப்ஹாப் தமிழாவை கொண்டுவந்தால், சூப்பராக இருக்கும் என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க.. இந்த படத்துக்கு யார் கரெக்ட்டான இசையமைப்பாளராக இருப்பாங்க?

Similar News

News November 6, 2025

BREAKING: விடுமுறை… நாளை முதல் முக்கிய அறிவிப்பு

image

வார விடுமுறையில் மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சுமார் 1,000 சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(நவ.7) முதல் 9-ம் தேதி வரை சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். SHARE IT.

News November 6, 2025

ஓட்டுப் போட மிகவும் ஆர்வம் காட்டும் பிஹார் மக்கள்

image

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிஹார் தேர்தலில், மதியம் ஒரு மணி வரை, 42.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கத்தை விட இம்முறை பிஹார் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை வாக்குப்பதிவு சதவீதம் தெளிவாக காட்டுகிறது. அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 46.73% வாக்குகள் பதிவாகியுள்ளதாக EC தெரிவித்துள்ளது. பிஹாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

News November 6, 2025

RAIN ALERT: 19 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுது!

image

பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், தி.மலையில் இடியுடன் மழையும், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!