News November 6, 2025

டெல்லியிடம் ராமதாஸ் வைக்கும் டிமாண்ட்?

image

பாமகவில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. அப்போது, எந்தப் பக்கம் கூட்டணி சென்றாலும் 20 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒப்புக்கொண்டு அதை எழுத்துப்பூர்வமாக எழுதி தரணும் என ராமதாஸ் கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி டெல்லிக்கு பச்சை சிக்னல் காட்டியிருக்கும் ராமதாஸ் தரப்பு, அதுதொடர்பான பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக உள்ளதாக தைலாபுர வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

Similar News

News November 6, 2025

இதெல்லாம் காலக் கொடுமை: சீமான்

image

நாட்டிலேயே மதுபானத்துக்கு ’வீரன்’ என பெயர் வைத்து, அதை டாஸ்மாக்கில் விற்பனை செய்தது தமிழ்நாட்டில் மட்டுமே தான் என சீமான் விமர்சித்துள்ளார். இவையெல்லாம் பைத்தியக்காரத் தனமாக இருப்பதாக கூறிய அவர், வீரன் என்ற பெயரை TN அரசு இழிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதை காலக்கொடுமை என சுட்டிக்காட்டிய அவர், தமிழ் வளர்க்கும் மாநிலமா இப்படி செய்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 6, 2025

BREAKING: 4-வது T20.. இந்தியா பேட்டிங்

image

இந்திய அணிக்கு எதிரான 4-வது T20-யில் டாஸ் வென்ற ஆஸி., அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. 3-வது போட்டியில் விளையாடிய அணியே தொடருகிறது. பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ், துபே, அக்சர், சுந்தர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.

News November 6, 2025

திமுக, தவெக இடையேதான் போட்டி: டிடிவி

image

NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என TTV தெரிவித்துள்ளார். 2026-ல் DMK- TVK இடையேதான் போட்டி. ஆனால், அமமுகவை தவிர்த்துவிட்டு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது எனக் கூறினார். மேலும், விஜய்யின் வருகையால் அடுத்த தேர்தலில் ADMK 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் EPS என்ற துரோக சக்தியை அமமுக வீழ்த்தும் எனவும் சூளுரைத்துள்ளார்.

error: Content is protected !!