News April 19, 2024
வாக்களிப்பதை கட்டாயமாக்கியுள்ள நாடுகள் (2)

பெல்ஜியத்தில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கவில்லையெனில் 50 யூரோ அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. லக்சம்பர்க் நாட்டிலும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் 95% வாக்குகள் பதிவாகின்றன. இத்தாலியில் வாக்களிப்பது மக்கள் பணி என்று அரசியலமைப்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News May 7, 2025
திருக்காரவாசல்: நாளை கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம்

மே தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், நாளை திருக்காரவாசல் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொள்ள உள்ளார். கிராம சபை கூட்டங்களில் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் மற்றும் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
News May 7, 2025
இந்தியாவின் தங்கமகன் சன்னி தாமஸ் காலமானார்!

இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ்(85) மாரடைப்பால் காலமானார். இவரின் தலைமையில் இந்திய அணி, 108 தங்கம், 74 வெள்ளி, 53 வெண்கல பதக்கங்களை பல்வேறு தொடர்களில் வென்றுள்ளது. இதில் 3 ஒலிம்பிக் பதக்கங்களும் அடங்கும். இவருக்கு 2001-ம் ஆண்டில் இந்திய அரசு துரோணாச்சாரியார் விருது வழங்கி கெளரவித்தது. #RIP
News May 7, 2025
விவாகரத்து… புதுக்காதல்… மேரி கோம் விளக்கம்

விவாகரத்து, புதிய காதல் என மேரிகோம் பற்றி அடுத்தடுத்து செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது வழக்கறிஞர் மூலம் தெளிவான அறிக்கையை மேரி கோம் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2023-ம் ஆண்டே கணவர் கரங் ஆன்லிரை அவர் விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. மேலும் ஹிதிஷ் சவுதி என்பவரை மேரிகோம் காதலித்து வருவதாக வெளியான செய்தியும் மறுக்கப்பட்டுள்ளது.