News November 6, 2025
நாமக்கல்: இதை செய்தால் பணம் போகும்!

நாமக்கல் மக்களே, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. அதாவது, WhatsApp, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி E-Challan மெசேஜ்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தைகயை எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே, உஷாராக இருங்க மக்களே! இதை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 11, 2026
நாமக்கல்: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு!

நாமக்கல் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க
News February 11, 2026
நாமக்கல்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

நாமக்கல் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
நாமக்கல்லில் அடுத்த ஜல்லிக்கட்டு! update

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் – தாண்டகவுண்டன்பாளையத்தில் கடந்த பிப்.7-ம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த வீர விளையாட்டுப் போட்டி வருகின்ற பிப்.13, 2026 அன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வாடிவாசல் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


