News November 6, 2025
அந்த மேஜிக் மீண்டும் நடக்குமா?

ரஜினி என்றாலே ஜாலியான, குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் மாஸ் கமர்சியல் ஹீரோ. ஆனால், அப்படியான ரஜினியை ‘பேட்ட’ படத்திற்கு பிறகு பெரிதாக பார்க்க முடியவில்லை. எல்லாமே ரொம்ப சீரியஸான ரத்தம் தெறிக்கும் அதிரடி படங்களாகவே சமீபத்தில் வெளிவந்துள்ளன. ஆனால், நாம் ரசித்து கொண்டாடி தீர்த்த ரஜினியை மீண்டும் சுந்தர்.சி திரையில் கொண்டுவருவாரா என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் உள்ளனர். சாதிப்பாரா சுந்தர்.சி?
Similar News
News February 9, 2026
திமுக ஆட்சியில் கோவை புறக்கணிப்பு: எஸ்.பி.வேலுமணி

கோவையில் தெருமுனை பிரசாரத்தை துவக்கிவைத்த பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தார். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், எந்த திட்டத்தையும் கொண்டுவரவும் இல்லை, கொண்டு வர நிதியையும் ஒதுக்கவில்லை. ஆனால், விளம்பரம் மட்டும் திமுக செய்வதாக விமர்சித்தார்.
News February 9, 2026
கம்யூ., சித்தாந்தத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும்:

நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டுகள் எங்கெல்லாம் ஆட்சியில் இருந்தார்களோ, அங்கெல்லாம் அவர்களால் வளர்ச்சியை கொண்டுவர முடியவில்லை. கம்யூனிச சித்தாந்தம் அழிவைக் குறிக்கும் ஒரு சித்தாந்தமாகும். எனவே, அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 9, 2026
T20 போட்டிகளில் மோசமான சாதனை!

இலங்கை T20 அணியின் கேப்டன் தசுன் ஷனகா மிக மோசமான சாதனையை படைத்துள்ளார். T20 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக இன்று டக் அவுட் ஆனார். இதன்மூலம், T20 போட்டிகளில் அதிகமுறை(16) டக் அவுட் ஆன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில், ருவாண்டாவின் ஜாப்பி(15) மற்றும் அயர்லாந்து கேப்டன் ஸ்டிர்லிங்(14) ஆகியோர் உள்ளனர்.


