News November 6, 2025
திண்டுக்கல்லில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (நவம்பர் 6) நடைபெற உள்ள இடங்கள்: திண்டுக்கல் மாநகராட்சி – நாகல்நகர், சௌராஷ்டிரா சபை நூற்றாண்டு விழா மண்டபம்; ஒட்டன்சத்திரம் – தங்கச்சியம்மாபட்டி பிளோரிஷிங் இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி; பழனி – வடக்கு தாதநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம்; நத்தம் – பரளிப்புதூர் அழகாபுரி மந்தை திடல்; ரெட்டியார்சத்திரம் – தர்மத்துப்பட்டி எம்.ஆர் திருமண மண்டபம்.
Similar News
News November 6, 2025
திண்டுக்கல்: டிப்ளமோ போதும்! ரயில்வேயில் வேலை

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <
News November 6, 2025
திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி!

திண்டுக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 6, 2025
JUST IN: திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

திண்டுக்கல், பாறைப்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தச்சுத் தொழிலாளி ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் இரு சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


