News November 6, 2025

நீலகிரியில் அரசு பேருந்து விபத்து!

image

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான் பத்தேரிக்கு நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. நாடுகாணி பாண்டியாறு குடோன் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பேருந்தை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர மரத்தில் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால், அதிர்ஷவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

Similar News

News February 5, 2026

நீலகிரி: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

image

நீலகிரி: பிப்ரவரி 7-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எச்பிஎப், உல்லத்தி, தாவணை, தலைகுந்தா, மேலூர், கோழிப்பண்ணை, அத்திக்கல், குளிச்சோலை, கல்லட்டி, அனுமாபுரம், சோலாடா, கடசோலை மற்றும் பைக்காரா ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நீலகிரி மாவட்ட மின்பகிர்மான அலுவலர் தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

நீலகிரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News February 5, 2026

நீலகிரி: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE IT!

error: Content is protected !!