News November 6, 2025
வயிற்று கொழுப்பை கரைக்க காலையில் இத பண்ணுங்க!

Russian Twist உடற்பயிற்சியை செய்வது அடிவயிற்று கொழுப்பை கரைக்க உதவும் ✦செய்முறை: தரையில் கால் முட்டியை மடக்கிய படி, பாதங்கள் தரையில் படாதவாறு அமரவும்.(படத்தில் உள்ளது போல) பேலன்ஸுக்காக முதுகை பின்னோக்கி வளைத்து, வயிற்று தசைகளை இறுக்கமாக வைக்கவும். கைகளை சேர்த்து வைத்து, உடலை வலதுபுறமாக திருப்பவும். அதே போல, இடதுபுறமாக திருப்பவும். இதே போல, மாறி மாறி 15- 20 முறை என 2 செட்களாக செய்யலாம்.
Similar News
News November 6, 2025
அனைத்து கட்சி கூட்டத்திற்கு CM ஏன் வரவில்லை? ஜெயக்குமார்

கரூர் கூட்ட நெரிசல் எதிரொலியாக, கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த ஜெயக்குமார், கூட்டத்திற்கு CM, DCM ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
News November 6, 2025
சற்றுமுன்: KGF நடிகர் காலமானார்

பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய் சற்றுமுன் காலமானார். கே.ஜி.எஃப்-ல் காசிம் சாச்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார் ஹரிஷ் ராய். அதன்பின், அவரை ‘சாச்சா’ என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வந்தனர். இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 6, 2025
இனி கட்டணம் இல்லாமல் டிக்கெட் கேன்சல்: DGCA

விமான பயணிகளின் புகார்களை தொடர்ந்து, டிக்கெட் ரத்து மற்றும் பணத்தை திருப்பி அளிக்கும் நடைமுறைகளை மாற்றியமைக்க, DGCA புதிய வரைவு விதிகளை முன்மொழிந்துள்ளது. குறிப்பாக விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் எந்த கூடுதல் கட்டணமும் இன்றி டிக்கெட்டை ரத்து செய்ய அல்லது மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. இது குறித்து மக்களின் கருத்துகளை பெற்ற பின், நவ.30-க்கு பிறகு விதிகள் இறுதி செய்யப்படும்.


