News November 6, 2025
நாகை: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(26). இவர் இன்று காலை புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு மோட்டார் மூலம் தண்ணீர் பிடிப்பதற்கு மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அருண்குமாரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 6, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம் 163 பாகம் நகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 6, 2025
நாகை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 6, 2025
நாகை மாவட்டத்தில் 1.07 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

நாகை மாவட்டத்தில், குறுவை நெல் சாகுபடி அறுவடை செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1,07,764 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23,146 விவசாயிகளிடமிருந்து நெல் வாங்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.256.67 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் 91,218 மெட்ரிக் டன் நெல் கிடங்குகள் அனுப்பப்பட்டுள்ளது.


