News November 6, 2025
சேலம்: மக்களே உஷார்.. ரூ.50 லட்சம் மோசடி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். அதில் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பர்வீன் காதர் பாஷா, சிங்கப்பூரில் வேலை இருப்பதாக கூறி, ஒவ்வொரு வருடமும் 1 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி, 6 மாதங்கள் ஆகியும் வேலையும் தரவில்லை, பணமும் தரவில்லை எனக்கூறி, பணத்தை மீட்டு தர மனு அளித்தனர்.
Similar News
News November 6, 2025
சேலத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

சேலம்: ஆடையூர் ஊராட்சிக்குட்பட்ட நாச்சிமுத்தூர் அரசு துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக தங்கராசு என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் பணி நேரத்தில் பள்ளிக்குள்ளேயே மது போதையில் இருந்ததாகவும், இதனை தட்டி கேட்ட பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் தங்கராசு கைது செய்யப்பட்டார்.
News November 6, 2025
சேலம்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

சேலம் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 6, 2025
சேலம்: FREE.. வீடு கட்டப் போறீங்களா?

சேலம் மக்களே, வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!


