News November 6, 2025

புதுவை: ONGC நிறுவனத்தில் உதவித் தொகையுடன் பயிற்சி

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ONGC நிறுவனத்தில் 153 பணியிடங்களில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் ஆகியோர்களுக்கான ஒரு வருட காலத்திற்கான ரூ.9,600 – ரூ.12,300/- உதவித் தொகையுடன் பயிற்சி வாய்ப்புகள் (Apprenticeship) வழங்கப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு ongcapprentices.ongc.co.in என்கின்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 6, 2025

புதுவை- கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

புதுவை நோணாங்குப்பம் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (நவ.6) இரவு 10 மணி முதல் நாளை (நவ.7) காலை 6 வரை, புதுச்சேரி – கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுவையில் இருந்து கடலுார் நோக்கி செல்லும் வாகனங்கள் அரும்பார்த்தபுரம் பைபாஸ் வழியாகவும், கடலுாரில் இருந்து புதுவை நோக்கி செல்லும் வாகனங்கள் தவளகுப்பத்தில் திரும்பி பைபாஸ் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

News November 6, 2025

புதுச்சேரி: 10th போதும்..அரசு வேலை!

image

புதுச்சேரி மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 69 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது, சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.1,77,500 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-11-2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 6, 2025

புதுவை: மர்மமான முறையில் கூலி தொழிலாளி இறப்பு

image

பாகூர் அடுத்த பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் முத்து, சுமை தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை 2:30 மணியளவில், வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். பின், பெரிய ஆராய்ச்சி குப்பதில் சாலையோரமாக மாடுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்தில், தலையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து எவ்வாறு இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!