News November 6, 2025
உங்கள் உடல் உறுப்புகளுக்கு எதை பார்த்தால் பயம்?

நீங்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளால் உங்கள் உள்ளுறுப்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதன் பாதிப்பு மெதுவாக தான் தெரியும். 35 வயதுக்கு மேல், ஒவ்வொரு பிரச்னையாக வெளியே வரும். அதுவரை காத்திருக்கப் போகிறீர்களா? உங்கள் உடல் உறுப்புகளை பாதிக்கும் விஷயங்கள் எவை என்பதை இப்போதே தெரிந்துகொண்டு, அவற்றை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள். அதற்கு மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE IT
Similar News
News November 7, 2025
கவுரி கிஷனுக்கு ஆதரவாக நிற்கும் சந்தோஷ் நாராயணன்

நடிகை கவுரி கிஷனிடம் யூடியூபர் ஒருவர் உங்கள் எடை என்ன என கேட்டது பெரும் சர்ச்சையானது. யூடியூபருக்கு மேடையிலேயே கவுரி கிஷன் தக்க பதிலடி கொடுத்த நிலையில், அவரது தைரியத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது கருத்து சரி என்பது போல் பத்திரிகையாளர் தொடர்ந்து பேசியது, அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 7, 2025
நாளை சங்கடஹர சதுர்த்தி… நன்மைகள் என்னென்ன?

நாளை மதியம் 12.33 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி திதி தொடங்கி, மறுநாள் காலை 10.25 வரை இருக்கிறது. மாலை நேர வழிபாடு தான் சங்கடஹர சதுர்த்திக்கு உகந்தது என்பதால், நாளை மாலை விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். முக்கியமாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது. அருகம்புல் படைத்து வழிபட்டால் நோய்கள், கடன் தொல்லை உள்ளிட்ட பல பிரச்னைகள் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.
News November 7, 2025
செங்கோட்டையனுக்கு பின்னணியில் திமுக? நயினார்

செங்கோட்டையன் விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் பாஜகவில் யாரை பார்த்தார் என்ன பேசினார் என்ற தெளிவான தகவல் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் <<18224796>>6 பேர் சென்றதாக செங்கோட்டையன் கூறும்<<>> நிலையில் அவர்கள் யார் எனவும் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.


