News November 6, 2025
புலனாய்வுத்துறையில் 258 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

மத்திய அரசின் புலனாய்வுத்துறையில் 258 காலிப்பணியிடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று, 2023 முதல் 2025 வரை கேட் தேர்வில் தகுதி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News February 9, 2026
விடாப்பிடியாக இருக்கும் காங்., கறார் காட்டும் திமுக

தொகுதிப் பங்கீடு குறித்து பேச 36 நாட்களாக காங்., குழு காத்திருக்கும் நிலையில், திமுகவோ இன்னும் குழுவை அமைக்கவில்லை. இதற்கு காரணம் காங்., 41 தொகுதிகள் வேண்டும் என விடாப்பிடியாக இருப்பதுதான் என கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு அதிக சீட் கொடுத்தால் கூட்டணியில் பிரச்னை வந்துவிடும். சீட் எண்ணிக்கையை குறைத்தால் மட்டுமே தொகுதிப்பங்கீடு குறித்து பேச முடியும் என்பதில் திமுகவும் விடாப்பிடியாக இருக்கிறதாம்.
News February 9, 2026
காழ்ப்புணர்ச்சியால் அதிமுக மீது திமுக விமர்சனம்

‘எப்போதும் அதிமுக தனது சுயமரியாதையை விட்டுக்கொடுத்தே இல்லை என்று உதயநிதிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் விமர்சனங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை எனக்கூறிய அவர், மக்களின் செல்வாக்கு அதிமுகவிற்கே உள்ளது என்பதை வரும் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்; அதிமுக எவருக்கும் கிளையாக மாறாது, அது தனித்துவமான இரட்டை இலை எனத் தெரிவித்தார்.
News February 9, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 9, தை 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 PM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


