News November 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 511 ▶குறள்: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். ▶பொருள்: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

Similar News

News February 19, 2026

Flying Kiss கொடுத்தவருக்கு 3 ஆண்டு சிறை

image

16 வயது சிறுமிக்கு Flying Kiss கொடுத்தவருக்கு மும்பை ஸ்பெஷல் கோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2017-ல் நடந்த சம்பவத்துக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Flying Kiss பாதிப்பில்லாதது போல் தோன்றினாலும், அது சட்டப்படி பெண்ணின் கண்ணியத்தை மீறும் பாலியல் ரீதியான செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு தற்போது திருமணமாகி ஒரு கைக்குழந்தையும் உள்ளது.

News February 19, 2026

இந்திய ஸ்நாக்ஸை துரத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

image

இந்திய ஸ்நாக்ஸ் சந்தையில் ₹5 அல்லது ₹10 பாக்கெட்டுகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதன் சந்தையின் மதிப்பு 2027-ம் ஆண்டுக்குள் ₹1,21,700 கோடியை எட்டும் என்று தொழில்துறை வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. சிப்ஸ், வேஃபர்கள் மட்டுமல்லாமல் முறுக்கு, மிக்சர் போன்ற ஸ்நாக்ஸ் சந்தையில் 43% -ஐ பிடித்துள்ளன. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய ஸ்நாக்ஸ் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

News February 19, 2026

வங்கிக் கணக்கில் ₹2000+₹2000.. ஹேப்பி நியூஸ்

image

கோடைகால சிறப்பு நிதியாக இனி ஆண்டுதோறும் மகளிருக்கு <<19184435>>₹2,000 <<>>வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 மாத மகளிர் உரிமை தொகையுடன், கோடைகால சிறப்பு நிதியும் சேர்த்து, மகளிரின் வங்கி கணக்கில் ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மே மாதத்தில் மட்டும் தேர்தல் வாக்குறுதியின்படி உயர்த்தப்படவுள்ள மகளிர் உரிமை தொகை ₹2,000, கோடைகால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹4,000 வழங்கப்படும்.

error: Content is protected !!