News April 19, 2024

வாக்களிக்க ஒரே நிற உடையில் வந்த அஜித், விஜய்

image

அஜித், விஜய் ஆகியோர் வாக்களிக்க ஒரே நிற உடையில் வந்தது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்தது. திரையுலகில் இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதாக கருத்து உண்டு. இந்நிலையில், நடிகர் அஜித்குமார் காலை 7 மணிக்கு முதல் ஆளாய் வந்து வாக்களித்தார். அப்போது வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். மதியம் 12.30 மணிக்கு விஜய் வாக்குப்பதிவு செய்தார். இதை கண்ட ரசிகர்கள், சட்டை நிறத்திலுமா போட்டி என கலாய்க்கின்றனர்.

Similar News

News May 7, 2025

வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ்

image

குடியாத்தம் வெள்ளேரியை சேர்ந்த கவிதா தனது கணவருடன் நேற்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் ”நானும் எனது கணவரும் கூலி வேலைசெய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சென்னையில் நிறுவனம் இயங்கி வருவதாகவும், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.

News May 7, 2025

பேரனை திருமணம் செய்த பெண்.. நடந்தது என்ன?

image

உ.பி.,யில் 50 வயது பெண் ஒருவர் 30 வயது பேரனுடன் தகாத உறவில் இருந்ததோடு அவரை திருமணமும் செய்து உள்ளார். லக்னோவை சேர்ந்த இந்திராவதி, பேரன் உறவு கொண்ட ஆசாத்துடன் நெருங்கி பழகியதை அவரது கணவர் சந்திரசேகர் பெரிதாக கருதவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டதோடு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

News May 7, 2025

விஜயகாந்துக்கு பாரத ரத்னா.. தேமுதிக தீர்மானம்!

image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தருமபுரியில் பிரேமலதா தலைமையில் தேமுதிக பொதுக்குழு கூடியது. இதில், சென்னை கோயம்பேடு 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விஜயகாந்துக்கு கடந்த ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

error: Content is protected !!