News November 6, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 6, 2025

திருப்பத்தூரில் ரூ.3 லட்சம் மோசடி!

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று(நவ.5) நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட லக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் எனும் தொழிலாளி, தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கடந்த 2023ஆம் ஆண்டு ரூ. 3 லட்சம் பணத்தை வாங்கிய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்தார்.

News November 5, 2025

திருப்பத்தூர்: முன்னாள் படை வீரர் குறைத்தீர்வு நாள்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.11.2025 அன்று பிற்பகல் 2 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

திருப்பத்தூர் பெண்களின் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு, திருப்பத்தூர் காவல்துறை சார்பில் இன்று (நவ.5) ஒரு எச்சரிக்கை விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘பெண்கள் யாரேனும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் உடனடியாக 1091, 181 என்ற எண்ணிற்கு அழைக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!