News November 6, 2025

சமூக வலைதளங்களில் இதை செய்ய வேண்டாம்!

image

சமூக வலைதளங்களில் முகவரி, தொலைபேசி எண், குடும்ப தகவல், தனிப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் போன்ற தகவல்களை பகிர வேண்டாம். இது மோசடி, மிரட்டல், கணக்கு திருட்டு மற்றும் கள்ள அடையாளம் உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். அறிமுகமில்லாத நபர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம். இணையத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள். பாதுகாப்புடனும் விழிப்புடன் இருங்கள் என சேலம் போலீசார் அறிவுறை!

Similar News

News November 6, 2025

சேலம்: வேலை வாங்கி தருவதாக 50 லட்சம் மோசடி

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர் அதில் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பர்வீன் காதர் பாஷா சிங்கப்பூரில் வேலை இருப்பதாக கூறி ஒவ்வொரு வருடமும் 1லட்சத்து 25 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஆறு மாதங்கள் ஆகியும் வேலையும் தரவில்லை பணமும் தரவில்லை பணத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர்.

News November 5, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News November 5, 2025

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் அனைவரும் முன் செல்லும் வாகனத்துடன் குறைந்தது 10 மீட்டர் தூரம் விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான தூரம் பின்பற்றுவது விபத்துகளை தவிர்க்கும் முக்கிய வழிமுறையாகும் எனவும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!