News November 6, 2025
RCB அணி விற்பனை.. வாங்குவதற்கு கடும் போட்டி

2025 ஐபிஎல் சாம்பியன்ஸான RCB அணியை விற்க டியாஜியோ பிஎல்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. RCB ஆடவர், மகளிர் அணிகளை விற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அவை முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அதானி குழுமம், சீரம் இன்ஸ்டிடியூட், JSW குரூப்ஸ் வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் RCB அணியின் பெயரும் மாற்றப்படவுள்ளது.
Similar News
News February 15, 2026
மகளிருக்கு ₹5,000.. ஆங்காங்கே வெடித்த அதிருப்தி!

மகளிருக்கு வழங்கப்பட்ட ₹5,000 வந்தவர்களிடம் ஆதரவுக்கு இணையாக, வராதவர்களிடம் கடும் அதிருப்தி உள்ளது. <<19147751>>தேனியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள்<<>>, உரிமைத்தொகைக்கு தாங்கள் விண்ணப்பித்த ரசீதுடன் எங்களுடன் பணம் வரவில்லை; நாங்க ஓட்டு போட மாட்டோம் என்கின்றனர். <<19146529>>மதுரையில் ஒருவர் ₹5,000-ஐ அரசுக்கே<<>> திருப்பி அனுப்பியுள்ளார். பலர் பொங்கல் பரிசு கொடுத்த 2.22 கோடி கார்டுக்கும் ₹5,000 கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News February 15, 2026
Google தேடலில் ஆபாச தளங்கள் வராமல் Lock செய்வது எப்படி?

குழந்தைகள் போனை தனியாக பயன்படுத்தும்போது, ஆபாச தளங்கள் கூகுளில் வராமல் இருக்க, <
News February 15, 2026
திமுக கூட்டணியில் 5 சீட்டு.. சற்றுமுன் அறிவிப்பு

2026 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வரும் தேர்தலில் மமக-வுக்கு 5 தொகுதிகளை(தனிச் சின்னம்) ஒதுக்க வேண்டும் என்றும் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் இக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 5 தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது.


