News November 5, 2025
இன்சூரன்ஸ் பணத்துக்காக போலி டெத் டிராமா!

₹25 லட்சம் பணத்துக்காக கணவன் இறந்துவிட்டதாக நாடகமாடிய இளம்பெண் மற்றும் அவரது கணவன் போலீசில் சிக்கியுள்ளனர். லக்னோவை சேர்ந்த ரவி சங்கர், 2023 ஏப்.9 அன்று இறந்துவிட்டதாகக் கூறி, ஏப்.21 அன்று இன்சூரன்ஸ் கம்பெனியில் மனைவி கேஷ் குமாரி டாக்குமெண்ட் சமர்ப்பித்துள்ளார். பின்னர், கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தில் தம்பதி ஜாலியாக இருப்பதை அறிந்த போலீசார் இருவரையும் கொத்தாக தூக்கி சிறையில் அடைத்துள்ளனர்.
Similar News
News November 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 6, 2025
‘Money Heist’ பாணியில் ₹150 கோடி பண மோசடி

பிரபல திரில்லர் வெப் சீரிஸான ‘Money Heist’ பாணியில் டெல்லி கேங் ஒன்று ₹150 கோடி பண மோசடி செய்துள்ளது. வெப்சீரிஸில் இன்ஸ்பைர் ஆன குற்றவாளிகள் Professor (அர்பிட்), அமாண்டா (பிரபாத்), ஃப்ரெடி (அப்பாஸ்) என பெயர் மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பங்குச்சந்தை டிப்ஸ் வழங்கி, அதிக லாபம் ஈட்டலாம் என கூறி, பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர்.
News November 6, 2025
விஜய்யின் பேச்சு விந்தையிலும் விந்தை: நயினார்

புதிதாகக் கட்சி ஆரம்பித்துவிட்டு எங்களுக்கு தான் போட்டி என்றால், அது விந்தையிலும் விந்தையாக இருப்பதாக விஜய்யின் பேச்சு குறித்து நயினார் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக, தேசிய அளவில் அதிக MP-க்களை கொண்ட பெரிய கட்சி எனவும், தங்கள் கூட்டணி வலுவாக நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, அதிமுக, பாஜக தலைவர்கள் விஜய், NDA கூட்டணியில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.


