News November 5, 2025
திண்டுக்கல்: வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையின் அறிவுரை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று (நவம்பர் 5) சமூக வலைத்தளங்களில் வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரையாக, வாகனக் கதவை திறப்பதற்கு முன்னர் பின்னால் வேகமாக வரும் வாகனங்களை கவனிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் சாலை பாதுகாப்பு மேம்பட்டு, சாலை விபத்துகள் குறைவடையும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News November 6, 2025
திண்டுக்கல்: வேளாண் குறை தீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 10.11.2025 அன்று முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை வேளாண் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைகளை முன்வைத்து தீர்வு பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.
News November 5, 2025
திண்டுக்கல்: காட்டு மாடு தாக்கி மூதாட்டி பலி!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஆடலூர் மலைப்பகுதியில் இன்று (நவம்பர் 5) கூலித் தொழிலாளி பாக்கியம் (60) என்பவர் காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து கன்னிவாடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
திண்டுக்கல்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)


