News April 19, 2024
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 கன அடியாக குறைவு

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 55.620 அடியில் இருந்து 55.410 அடியாக குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 21.389 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக உள்ளது.
Similar News
News April 19, 2025
சேலத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப்.21 அன்று காலை 10.00 மணியளவில் தொடங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0427- 2401750 அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரில் அணுகியும் பயன்பெறலாம். இதை அரசு வேலைக்கு தயாராகும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News April 19, 2025
பெங்களூரு-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06585) இன்று 19-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை வழியாக 8.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
News April 19, 2025
சேலம் ஆட்சியரகம் எண்கள்

▶️மாவட்ட ஆட்சித் தலைவர்: 0427-2450301
▶️கூடுதல் ஆட்சியர், வளர்ச்சி முகமை, சேலம்: 7373704207
▶️மாவட்ட வருவாய் அலுவலர்: 9445000911
▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது): 9445008148
▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (நிலம்): 9750080888
▶️தனித்துணை ஆட்சியர், (சமூக பாதுகாப்புத் திட்டம் – ச.பா.தி) :9443797855
SHARE பண்ணுங்க மக்களே