News November 5, 2025

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு Apply!

image

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

Similar News

News November 5, 2025

புதிய அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைத்த எம்.எல்.ஏ

image

சீர்காழி ஊராட்சி ஒன்றியம் விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

News November 5, 2025

மயிலாடுதுறை: மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி சிறார் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பரிசோதனை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

News November 5, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாங்கனம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியர் பார்வையிட்டு பொது மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள மருந்து மாத்திரை கையிருப்பு விவரங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!