News November 5, 2025
ஒரு படம்.. ஓராயிரம் அர்த்தங்கள்! PHOTOS

100 பக்கங்களில் விவரிக்க முடியாத ஒரு உணர்வை, ஒரு சிறு போட்டோ உணர்த்திவிடும். சோசியல் மீடியாக்களில் பகிரப்படும் மீம்ஸ்களும் அப்படித்தான். நம்மை பல நேரங்களில் சிரிக்க வைக்கும் இந்த மீம்ஸ், அதே அளவுக்கு சிந்திக்கவும் தூண்டுகின்றன. ஒரே படம் என்றாலும், ஆழமான கருத்துகளை கொண்ட வைரல் மீம்ஸ் கேலரி உங்களுக்காக.. படங்களை Swipe செய்து பார்க்கவும்.
Similar News
News November 5, 2025
மாணவர்களுக்கு HAPPY NEWS.. தமிழக அரசு அறிவித்தது

கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் லேப்டாப் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. 2025 – 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 3 நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஆலோசனை கூட்டம் DCM உதயநிதி தலைமையில் நடைபெற்றது.
News November 5, 2025
கர்ப்பிணிகளே இதில் அலட்சியம் வேண்டாம்!

➤குளிர் அல்லது காய்ச்சலுடன் அடிவயிற்றில் வலி இருந்தால் டாக்டரை அணுகுங்கள் ➤சிறுநிர் கழிக்கும் போது எரிச்சல் ➤மயக்கம் அல்லது தலைவலி அதிகமா இருந்தால் ➤பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு, மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் ➤ரத்த வாந்தி வருவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காதீங்க. தாயையும் சேயையும் காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 5, 2025
VAO நேரடி நியமனத்திற்கு தடை

தமிழகத்தில் 218 VAO பணியிடங்களை மாவட்ட பணியிட மாறுதல் மூலம் நிரப்பாமல், நேரடி நியமனம் மூலம் நிரப்ப TNPSC-க்கு மதுரை ஐகோர்ட் கிளை தடைவிதித்துள்ளது. நேரடி நியமன முறையால், டிரான்ஸ்ஃபருக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் வாய்ப்பு மறுக்கப்படுவதாக VAO சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வருவாய் துறை ஆணையர், TNPSC தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


