News November 5, 2025

தூத்துக்குடி: தலைமை செயலகத்தில் வேலை

image

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த மாதம் நடைபெறும். SHARE IT

Similar News

News November 5, 2025

தூத்துக்குடி: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

image

தூத்துக்குடி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

News November 5, 2025

கோவில்பட்டி சுந்தர்ராஜப்பெருமாள் கோவில் திருக்கல்யாணம்

image

கோவில்பட்டி ஸ்ரீ தேவி – நீலாதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. திருக்கல்யாண விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி நீலாதேவி உடனுறை சுந்தரராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News November 5, 2025

தூத்துக்குடி: அத்துமீற முயன்றவருக்கு தர்ம அடி

image

தெய்வச் செயல்புரத்தைச் சேர்ந்த முருகன் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இவர் அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்துவிட்டு வந்த பெண்னிடம் அத்துமீற முயன்றுள்ளார். அப்போது அப்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் முருகனுக்கு தர்ம அடி கொடுத்த நிலையில் இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!