News April 19, 2024
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்களிப்பு

அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடக்கிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவை சரி செய்யப்பட்டன.
மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை நெற்குன்றத்தில் வாக்களித்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி அளித்தார்.
Similar News
News April 19, 2025
சென்னை இரவு ரோந்து போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (19.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News April 19, 2025
சென்னை AC ரயில் குறித்து மக்கள் கருத்து

தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை சென்னையில் இன்று (ஏப். 19) தொடங்கியது. இந்நிலையில்,”கட்டணம் அதிகப்படியாக உள்ளது. PEAK HOURS தேவை அடிப்படையில் சேவைகள் இல்லாதது ஏமாற்றம். வெயில் கொளுத்தும் பகல் நேரத்தில் ஏசி சேவை இல்லை. குறைந்த அளவில் ஏசி சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன” உள்ளிட்ட குறைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். *உங்களுக்கு ஏதெனும் குறைகள் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க*
News April 19, 2025
சென்னை: ஜமீன் குடும்பத்தாருக்கு அபராதம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 45 கிரவுண்ட் நிலத்தை தங்களுடைய குடும்ப சொத்து எனக்கூறி சிவகிரி ஜமீனின் வாரிதாரர்கள் போலியான ஆவணங்களை தயார் செய்து வேறு ஒருவருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்துள்ளனர். (ஏப்ரல்19) இவ்வழக்கு விசாரணையில் சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.