News November 5, 2025
பொன்முடிக்கு மீண்டும் பதவி: இதுதான் காரணமா?

பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசியதால் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இதற்கு பின்னால் தலைமையின் மாஸ்டர் பிளான் இருக்கிறதாம். அதாவது, விழுப்புரத்தை கவனித்து வந்த MRK பன்னீர்செல்வம் கடலூரை சேர்ந்தவர் என்பதால், கட்சிப் பணிகளை செய்ய சிரமம் இருக்கிறதாம். எனவே, தேர்தலை கருத்தில் கொண்டு பொன்முடியை ஆட்டத்திற்குள் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 5, 2025
குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 5, 2025
அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?

AUS-க்கு எதிரான டி20 போட்டிகளில் அர்ஷ்தீப் சிங்கைவிட, ஹர்ஷித் ராணாவிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இது குறித்து விளக்கம் அளித்த IND அணியின் பவுலிங் கோச் மோர்கல், அர்ஷ்தீப் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், 2026 டி20 WC-க்கு தயாராகும் வகையில், அணியில் சில சோதனை முயற்சிகளை செய்ய வேண்டியிருந்தது, அதை அவரும் புரிந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
ஒரு படம்.. ஓராயிரம் அர்த்தங்கள்! PHOTOS

100 பக்கங்களில் விவரிக்க முடியாத ஒரு உணர்வை, ஒரு சிறு போட்டோ உணர்த்திவிடும். சோசியல் மீடியாக்களில் பகிரப்படும் மீம்ஸ்களும் அப்படித்தான். நம்மை பல நேரங்களில் சிரிக்க வைக்கும் இந்த மீம்ஸ், அதே அளவுக்கு சிந்திக்கவும் தூண்டுகின்றன. ஒரே படம் என்றாலும், ஆழமான கருத்துகளை கொண்ட வைரல் மீம்ஸ் கேலரி உங்களுக்காக.. படங்களை Swipe செய்து பார்க்கவும்.


