News November 5, 2025
ஹர்மன்பிரீத் கவுரின் கணவர் யார்? தேடும் நெட்டிசன்கள்

உலகக்கோப்பையை வென்றதற்கு இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல, அவரது கையில் இருக்கும் டாட்டூவின் அர்த்தம் என்ன என்றும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டாட்டூ பிரம்ம யந்திரா எனக் கூறப்படும் நிலையில், அவரது கணவர் குறித்த தகவல் இல்லை.
Similar News
News November 5, 2025
பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து VIDEO

ஓசூர், Tata Electronics நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2,000 பெண் ஊழியர்கள் ஓசூர் – தருமபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பெண்களின் கண்ணியம் காக்க TN அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
News November 5, 2025
DNA சோதனைக்கு ரெடி.. சவால் விட்ட ஜாய் கிரிசில்டா!

தனது குழந்தைக்கு <<18204429>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> தான் தந்தை என்பதை நிரூபிக்க DNA சோதனைக்கு தயார் என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். தனது குழந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும், இந்த நிலையிலும் மாதம்பட்டி மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், மிரட்டி திருமணம் செய்ய மாதம்பட்டி ரங்கராஜ் என்ன சின்ன குழந்தையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 5, 2025
மொத்தமாக அரிசிக்கு ‘NO’ சொல்றீங்களா? உஷார்

டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரிசியை ஒதுக்கி விடுவார்கள். ஆனால், அப்படி செய்வது உடலுக்கு தீங்கானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலும்பு, தசை, மூட்டுகள் சரியாக வேலை செய்ய, உடலுக்கு Glycogen அவசியம். இந்த Glycogen, கார்போஹைட்ரேட்டில் இருந்து தான் கிடைக்கிறது. எளிதில் செரிமானமாகும், கார்போஹைட்ரேட்டை கொடுக்கும் அரிசியை ஒதுக்குவதால், பல பிரச்னைகள் வரலாம். எனவே, கொஞ்சம் அரிசியை சாப்பிடுங்க.


