News November 5, 2025
பொன்னேரி அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த மாரி. அவரது மனைவி சாந்தா (87) என்பவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று (நவ.4) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் அரி கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
திருப்பத்தூர் பெண்களின் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு, திருப்பத்தூர் காவல்துறை சார்பில் இன்று (நவ.5) ஒரு எச்சரிக்கை விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘பெண்கள் யாரேனும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் உடனடியாக 1091, 181 என்ற எண்ணிற்கு அழைக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
திருப்பத்தூர் மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
திருப்பத்தூர்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

திருப்பத்தூர்: பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம். மேலும், திருத்தங்கள், புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே பெறலாம். இதற்கு <


