News November 5, 2025
கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 5, 2025
கரூர்: வரும் 8ஆம் தேதி ரேஷன் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் நவம்பர் 8 அன்று ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புதிய கார்டு கோருதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்படும். மேலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News November 5, 2025
கரூர் காவல்துறை வேண்டுகோள்!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .“அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகளில் 9498100780, காவல்துறை உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
கரூர்: டிகிரி போதும்! ரயில்வே துறையில் வேலை

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <


