News November 5, 2025
மேலூர் பொதுப்பணித்துறை ஊழியர் திடீர் மரணம்

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
மதுரையில் நாளை மின்தடை அறிவிப்பு

மதுரை பைக்காரா, பசுமலை பகுதியில் நாளை (நவ.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பழங்காநத்தம், அக்ரஹாரம், பசும்பொன் நகர், பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெரு வரை மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வைநகர், தேவி நகர், கிருஷ்ணாநகர், காயத்ரிதெரு, துரைசாமிநகர், கோவலன்நகர், அழகப்பன்நகர், திருவள்ளுவர்நகர், பிபிகே ரோடு, முத்துப்பட்டி, பைக்காரா, பசுமலை பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
மதுரை: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News November 5, 2025
மதுரை: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே மேல பனங்காடியை சேர்ந்தவர் கார்த்திக்(34). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தனது சம்பள பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் குடித்து வந்தார். இதனால் மனைவியுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கார்த்திக் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


