News November 5, 2025
புதுகை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி புதுகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சல் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 5, 2025
புதுகையில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

புதுகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 5, 2025
புதுகை: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா பணி

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் நவ.10 இல் நடக்கும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் குறித்து கலெக்டர் மு.அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக்குப்தா ஆகியோர் அவரிடம் விளக்கி கூறினர். இந்த ஆய்வின்போது திமுக வடக்கு மாவட்ட செயலர் கே.கே.செல்லப்பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
News November 5, 2025
புதுகை: பி.எம் கிசான் திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்

புதுகை மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற தனித்துவ அடையாள அட்டை எண் அவசியம், இத்திட்டத்தில் இதுவரை 88,730 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 21வது தவணை வரவு வைக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள் ஆதார் அட்டை, கணினி சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகியவற்றை அனைத்து வட்டார வேளாண் உதவிய இயக்குநர் அலுவலகங்களிலும் இ.சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.


