News November 5, 2025
அரியலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சல் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 5, 2025
அரியலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

அரியலூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 5, 2025
அரியலூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம், குருவாலப்பர் கோயில், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் பாகம் எண். 226-ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணியினை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாட்சியர் சம்பத் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News November 5, 2025
அரியலூர் மாவட்டத்தில் தொடரும் சாலை விபத்துக்கள்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி செல்லும் சாலையில் டிப்பர் லாரி விபத்துக்கு உள்ளானது. போதுமான போக்குவரத்து சாலை இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் சாலையினை அகலப்படுத்தி சுற்றுவட்ட சாலை அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து இப்பகுதியில் அதிக விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளதாக கூறி, சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


