News April 19, 2024
தேனாம்பேட்டை: செல்போனுக்கு தடை! சலசலப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் செல்போனை கொண்டு செல்லக் கூடாது என காவலர்கள் கூறியதால், வாக்காளர்கள் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளனர். வாக்களிக்கும் பொதுமக்கள் வாக்குச்சாவடி உள்ளே தொலைபேசி எடுத்து செல்ல வேண்டாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். மீறுவோர் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Similar News
News August 20, 2025
சென்னைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்பட் பல்வேறு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தலைநகர் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. இதனால், சென்னை வாசிகளே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். SHARE பண்ணுங்க.
News August 20, 2025
சென்னையில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நாளை (20.08.2025) 10 இடங்களில் நடைபெற உள்ளன. மணலி, மாதவரம், இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.
News August 20, 2025
மெட்ரோ உதவி எண்கள் செயல்படாது: மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உதவுவதற்கு எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உதவி எண்கள் தற்காலிகமாக செயல்படாது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. உதவி எண்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்தது.