News April 19, 2024
அணைகளின் நீர்மட்டம் தற்போதைய நிலவரம்

முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 142 அடி வரை நீர்த்தேக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் அணையின் தற்போதைய நீர்மட்டம் 115. 25 ஆக உள்ளது. வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போதைய நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது. ஐந்து மாவட்டங்கள் இதன் மூலமாகத்தான் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது.
Similar News
News August 24, 2025
ஆண்டிபட்டியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. ஒரு இடம் காலி தலைவராக தி.மு.கவைச் சார்ந்த சந்திரகலா இருந்து வருகிறார். இவர் மீது தி.மு.க அதிருப்தியாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் முன்வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தன.
News August 23, 2025
தேனி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News August 23, 2025
தேனி: கை ரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <