News November 5, 2025
சிறுபான்மை நலத்துறை அமைச்சரான Ex.கிரிக்கெட்டர்

தெலங்கானா அமைச்சராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. MLA தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாருதீனை கடந்த ஆகஸ்ட் மாதமே சட்ட மேலவை உறுப்பினராக பரிந்துரை செய்த நியமனத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. 1984 முதல் 2000-ம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் அசத்திய இவர், 2009- 2014 வரை MP ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 5, 2025
போலி வாக்காளர்கள் CONG-க்கு வாக்களிக்க மாட்டார்களா? ECI

<<18205152>>ஹரியானா வாக்கு திருட்டு<<>> குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ECI அதிகாரிகள் மறுத்துள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கும் SIR நடவடிக்கையை ராகுல் ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும். உண்மையில் போலி வாக்காளர்கள் இருந்தால், அவர்கள் பாஜகவிற்கு தான் வாக்களித்தார்கள் என்பதை ராகுல் எப்படி கூறுகிறார், ஏன் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்க மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
News November 5, 2025
FLASH: இலவச பட்டா.. தமிழக அரசு புதிதாக அறிவித்தது

சென்னையில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அயனாவரம், கிண்டி, அமைந்தகரை, கொளத்தூர், மாம்பலம், பெரம்பூர், வேளச்சேரி தாலுகாக்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க ராதாகிருஷ்ணன், மணவாளன் ஆகிய தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனராம்.
News November 5, 2025
விஷால் மீது ‘மகுடம்’ படத்தின் EX இயக்குநர் புகார்

விஷால் நடிப்பில் ‘மகுடம்’ படத்தை ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஷூட்டிங் தொடக்கத்திலேயே இருவருக்கும் முட்டிக்கொள்ள விஷாலே அப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் கதைக்காக ரவி அரசுக்கு ₹2.5 கோடி கொடுத்து செட்டில் செய்ததாக கூறப்பட்ட நிலையில், சொன்னபடி பணத்தை தராததால், அவர் இயக்குநர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


