News November 5, 2025
தேனி: 1389 பேரின் லைசன்ஸ் சஸ்பெண்ட்

தேனி மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து துறையினர் நேரடியாகவும், போலீசார் பரிந்துரையிலும் ஓட்டுநர் உரிமத்தை குறிப்பிட்ட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 10 மாதங்களில் மாவட்டத்தில் 1389 பேரின் ஓட்டுநர் உரிமங்களை 3 முதல் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 5, 2025
தேனி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பன்னுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தேனி மாவட்ட மக்கள் 04546-255477 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 5, 2025
தேனி: 10th போதும்; தேர்வு இல்லாமல் அரசு வேலை

தேனி மக்களே, மத்திய அரசின் அணுசக்தித் துறையில் 405 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <
News November 5, 2025
தேனியில் 5 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

தேனி மாவட்டத்தில் 5 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். சுருளி தேர்தல் பிரிவு தாசில்தாரராகவும், செந்தில்குமார் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனி தாசில்தாரராகவும், உதயராணி பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாரராகவும், சுந்தர்லால் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம், சரவணபாபு, ஆதிதிராவிடர் நலம் பிரிவு தனி தாசில்தாரராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


