News April 19, 2024
சேலம் மாநகராட்சி மேயர் வாக்களிப்பு

சேலம் மாநகராட்சி 6வது கோட்டம் சின்ன கொல்லப்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை சேலம் மாநகராட்சி மேயரும், அஸ்தம்பட்டி பகுதி செயலாளருமான ஆ.இராமச்சந்திரன் வாக்குப்பதிவு செய்தார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள், தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
சேலத்தில் நாளை முதல் இலவசம்!

சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் என மொத்தம் 148 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு https://www.drbsim.in வழியாக விண்ரப்பிக்கலாம்.கடைசி தேதி ஆக-29 ஆகும்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக 21-ல் எழுத்துத்தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது.விவரங்களுக்கு 0427-2401750 அழைக்கலாம்.SHARE பண்ணுங்க
News August 20, 2025
சேலம் வழியாக செல்லும் ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் இல்லை!

தீபாவளிக்கு ஒருநாள் முன்னதாக பயணிக்கப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.19) காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது. குறிப்பாக, பெங்களூருவில் இருந்து சேலம் வழியே நாகர்கோவிலுக்கு செல்லும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புக்கிங் தொடங்கிய 3 நிமிடத்தில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பின. அந்த ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்டே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News August 20, 2025
சேலம்: 22ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளையும், தேவைகளையும் எடுத்துரைக்கலாம் என்று கூறியுள்ளார்.