News November 5, 2025
திருச்சி: காளான் வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கட்டணத்துடன் கூடிய காளான் வளர்ப்பு பயிற்சி வரும் 6-ம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு வகையான காளான்களை கண்டுபிடித்தல், அவற்றை வளர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2962854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
திருச்சி: பேங்க் வேலை அறிவிப்பு APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 5, 2025
திருச்சி பெண் கொலை: ஆயுள் தண்டனை உறுதி

திருவெறும்பூரை சேர்ந்த முத்துலட்சுமி என்ற கொலை செய்யப்பட்ட வழக்கில், ரேவதி என்பவருக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இதனை ரத்து செய்யக்கோரி ரேவதி மதுரை நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொலை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர்.
News November 5, 2025
திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 10ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த விவரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


