News November 5, 2025
அட்லீ vs லோகி vs நெல்சன்.. யார் கரெக்ட் சாய்ஸ்?

தமிழ் மட்டுமின்றி, இந்திய சினிமாவின் அடுத்த மெகா ப்ராஜெக்ட் என்றால் அது ரஜினி- கமல் இணையும் படம்தான். ‘விக்ரம்’ படத்தின் மூலம் தனக்கு பெரிய கம்பேக் கொடுத்த லோகேஷை கொண்டுவர கமல் முயற்சித்தாலும், ரஜினியின் சாய்ஸ் லோகேஷ் இல்லை. நெல்சன் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரஜினியின் தேர்வாக அட்லீ மாறியிருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அட்லீ, லோகேஷ், நெல்சன்- மூவரில் யார் பெஸ்ட் சாய்ஸ்?
Similar News
News November 5, 2025
கோப்பையை டாட்டூ குத்திய கேப்டன்!

40 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்த உலகக்கோப்பை கனவை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி நிறைவேற்றியது. இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சரித்திரம் படைத்த அணிக்கு கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர், மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகிறார். மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்துள்ள அவர், உலகக்கோப்பையை தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார்.
News November 5, 2025
‘Sorry அம்மா.. நான் செத்துப் போறேன்’

CA தேர்வில் தோல்வியடைந்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த அகில் வெங்கட கிருஷ்ணா (29) என்ற மாணவர், தனது பெற்றோருக்கு உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘நான் உங்களை ஏமாற்றிவிட்டேன். இனி நான் வாழத் தகுதியற்றவன், என்னை மன்னித்து விடுங்கள்’ என கடிதம் எழுதி எழுதியுள்ளார். பின்னர், நேற்று இரவு முகத்தில் பிளாஸ்டிக் கவரைச் சுற்றிக் கொண்டு ஹீலியம் வாயுவை சுவாசித்து உயிரிழந்துள்ளார்.
News November 5, 2025
வாக்கு திருட்டில் ஈடுபட்டாரா பாஜக நிர்வாகி?

உ.பி அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் இருக்கும் தால்சந்துக்கு ஹரியானா & உ.பி என 2 மாநிலத்திலும் வாக்குகள் உள்ளது என்பதை ராகுல் அம்பலப்படுத்தியுள்ளார். தால்சந்தின் மகன் யஷ்வீருக்கும் உ.பி மதுராவிலும் ஹரியானாவில் ஹோடல் தொகுதியிலும் வாக்கு இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதேபோல ஆயிரக் கணக்கானோருக்கு உ.பி, ஹரியானா என 2 மாநிலங்களிலும் வாக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


