News November 5, 2025
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பிரேமலதா வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதிவு உயர்வு பெற்றுள்ளார். அதேபோல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த தயாளன் மதுரை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் 37 கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 5, 2025
வேலூர்: பெண் போலீஸ் மோசடி!

வேலுார், மேல்பாடி காவல் நிலையத்தில் ஜோதி என்ற பெண் போலீஸ் 8ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், 2019ம் ஆண்டு, தங்கள் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதாக கூறி, இளையநல்லுரை சேர்ந்த சிவக்குமாரிடம் மொத்தமாக ரூ.1,00,000 வாங்கியுள்ளார். பின் சிவகுமார் பணத்தை கேட்கும்போது “பணமெல்லாம் தர முடியாது; வேண்டுமானால் கோயில் கதவை கழற்றி எடுத்து செல்’ என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
News November 5, 2025
வேலூர் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News November 5, 2025
வேலூர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அச்சம்!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சாலைகளில், மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் பல வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர். எனவே மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


