News November 5, 2025
மயிலாடுதுறை போலீசார் எச்சரிக்கை

பொதுமக்கள் தங்களது அலைபேசிக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப் வழியாக வரும், எஸ்பிஐ அல்லது பிற வங்கியின் ஏபிகே கோப்புகளை பதிவிறக்கம் செய்யவோ அல்லது நிறுவவோ வேண்டாம். இதன் மூலம் உங்களது தொலைபேசி சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டு, உங்களது தகவல்கள் அல்லது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படலாம். போலி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News November 5, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாங்கனம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியர் பார்வையிட்டு பொது மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள மருந்து மாத்திரை கையிருப்பு விவரங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 5, 2025
மயிலாடுதுறை: வங்கியில் வேலை.. APPLY NOW!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 5, 2025
மயிலாடுதுறை: நாளை மழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


