News November 5, 2025
வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் பலி

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (56). இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு, நாகமநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டுக்கு பைக்கில் வந்த போது பின்னால் வந்த பைக் மோதியது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
திருப்பூர்: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 5, 2025
திருப்பூர்: மக்களுக்கு முக்கிய எண்கள்

காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ் சேவைக்கான-108, தீயணைப்பு துறைக்கான-101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர இருக்க வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன. பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு-1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு-181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால்-1094. ( SHARE)
News November 5, 2025
திருப்பூர்: வறுமை நீங்கி, செல்வம் சேர! இங்கு போங்க

திருப்பூர் மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் மிகவும் புனிதமான நாளாகும். இந்நாளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், செல்வ வளம் சேரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (SHARE பண்ணுங்க)


