News November 5, 2025
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தேதி அறிவிப்பு

மார்ச் 2 – 26-ம் தேதி வரை +2 பொதுத்தேர்வும், மார்ச் 11 – ஏப்.6-ம் வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 3 – 27 வரை 11-ம் வகுப்பு தேர்வும் நடைபெறவுள்ளன. இதன்படி, +2 மாணவர்களுக்கு மார்ச் 27 முதலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.7-ம் தேதி முதலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28 முதலும் கோடை விடுமுறை தொடங்குகிறது. அதேபோல், 1-9-ம் வகுப்பு வரை ஏப்ரல் மாதத்தில் விடுமுறை தொடங்கும்.
Similar News
News November 5, 2025
வாக்கு திருட்டு: ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு

ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்., கட்சிக்கே வெற்றி என கூறியதாக தெரிவித்த அவர், மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என கூறியுள்ளார். ஹரியானாவில் நடந்திருக்கும் மோசடிகள் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
BIG BREAKING: கூட்டணி முடிவு… அறிவித்தார் விஜய்

விஜய் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை தவெக சந்திக்கும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தவெக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கூட்டணிக்கு வர வேண்டும் என ADMK, BJP மாறி மாறி அழைப்பு விடுத்த நிலையில், அதனை தவெக நிராகரித்துள்ளது.
News November 5, 2025
தேர்தல் வியூகம்: இபிஎஸ் ஆலோசனை

அதிமுக தலைமை அலுவலகத்தில் EPS தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிப்பது, தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை சமாதானம் செய்யும் முயற்சியும் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.


