News November 5, 2025
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சொத்து விவரம்

இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர் ₹30+ கோடி சொத்துக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். அவர் எப்படி இத்தனை கோடி சொத்துகள் சேர்த்தார் தெரியுமா? மேலே உள்ள போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணி பாருங்க. இவரது விடாமுயற்சி அவருக்கு கோப்பை மட்டுமல்ல, கோடி மதிப்பிலான சொத்தை சேர்த்து கொடுத்துள்ளது. SHARE IT
Similar News
News November 5, 2025
சற்றுமுன்: விஜய் பாதுகாப்பு வாகனம் விபத்து

பொதுக்குழுவில் பங்கேற்க மாமல்லபுரத்திற்கு விஜய் வருகை தந்தபோது, பவுன்சர்கள் சென்ற வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை; கார் மட்டும் சேதமடைந்துள்ளது. கரூர் பரப்புரைக்கு சென்றபோதும், விஜய்யின் பவுன்சர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
News November 5, 2025
கோர ரயில் விபத்து..11 அப்பாவி பயணிகள் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் ஜெயராம் நகர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. நேற்று (நவ.11) மாலை 4 மணிக்கு நடந்த இவ்விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு, ரெட் சிக்னல் விழுந்தும் பயணிகள் ரயிலை நிறுத்தாததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News November 5, 2025
மனிதர்கள் தடயமே இல்லாமல் போவார்கள்: நாசா எச்சரிக்கை

பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து வருவதால், மனிதர்களே வாழ முடியாத நிலை உருவாகலாம் என நாசா எச்சரித்துள்ளது. நாம் சுவாசிக்கும் பாதிக்கும் மேலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் கடல்களில் உள்ள நுண்ணுயிர்கள் வெப்பமயமாதல் & அமிலமயமாக்கல் காரணமாக குறைந்து வருகின்றனராம். மேலும், காடுகளை அழிப்பது, மாசு அதிகரிப்பு, கார்பன் டைஆக்சைடு வெளியேற்றம் போன்றவற்றால் பூமியில் ஆக்சிஜன் அளவு குறைந்து வருகிறதாம்.


