News November 5, 2025

பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

image

தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு வரும் நவம்பர் 13 அன்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு 14ஆம் தேதியும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என பரிசு வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்தார்.

Similar News

News November 5, 2025

தென்காசி: டிப்ளமோ போதும்; CHENNAI METRO வில் வேலை.!

image

தென்காசி மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை<> கிளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி, மதுரையில் நவ.13 & 14 ல் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வேலை பெறலாம். இதற்கு சம்பளமாக ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News November 5, 2025

தென்காசி: சிறையில் தற்கொலை செய்தவர் உடல் ஒப்படைப்பு

image

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 30. கூலி தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ஆம் தேதி சிறை கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி 21 தினங்களுக்கு பின் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

தென்காசியில் கால அவகாசத்தை நீட்டித்து ஆட்சியர் உத்தரவு.!

image

தென்காசி மாவட்டத்தில், உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!