News November 4, 2025
PAK-கிற்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வழங்கும் சீனா

சீனாவின் அதிநவீன 8 நீர்மூழ்கி போர் கப்பல்களை (Hangor – Class Diesel – Electric Submarines) அடுத்த ஆண்டு தங்களது கடற்படையில் சேர்க்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இவை அதிநவீன ஆயுதங்கள், சென்சார்களை கொண்டிருப்பதோடு, நீருக்குள் வாரக்கணக்கில் இருக்கும் அளவிற்கு பேட்டரி திறனை கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 5, 2025
ராமதாஸை சுற்றி திமுகவின் கை கூலிகள்: அன்புமணி

ராமதாஸை சுற்றி துரோகிகள், தீயசக்திகள், திமுகவின் கை கூலிகள் உள்ளதாக அன்புமணி கூறியுள்ளார். ராமதாஸிடம் இருந்து தன்னை அவர்கள் பிரித்துவிட்டதாகவும், அந்த துரோகிகள் உள்ள வரை கண்டிப்பாக இணையமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை மன உளைச்சலில் கூறுவதாகவும் அன்புமணி குறிப்பிட்டார். 10 மாதங்களாக நீடிக்கும் அப்பா, மகன் மோதல் பாமகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
News November 5, 2025
புன்னகை பூவே மிருணாள் தாக்கூர்

தமிழ் திரையுலகில் தடம் பதிக்காவிட்டாலும் ரசிகர்களின் மனதில் பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறப்பவர் மிருணாள் தாக்கூர். SM-ல் ஆக்டிவாக உள்ள மிருணாள் தாக்கூர், இந்த வார ஸ்பெஷலாக கண்கவர் ஆடையில் போட்டோஷூட் எடுத்து அவற்றை பதிவிட்டுள்ளார். இவற்றுக்கு ஃபயர் விடும் ரசிகர்கள், தமிழில் எப்போது நடிப்பீர்கள் என கமெண்ட் செக்ஷனில் கேட்கின்றனர். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.
News November 5, 2025
புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு… அதிர்ச்சி செய்தி

புகைப் பழக்கத்தால் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை பாதிக்கும், அளவும் சுருங்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சிகரெட்களில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த உட்பொருட்கள் ஆணுறுப்பின் ரத்தநாளங்களை சேதப்படுத்துவதால் ரத்தவோட்டம் குறைந்து, நீளும் தன்மை பாதிக்கிறது. உடல்பருமன் அதிகரிப்பது, புராஸ்டேட் அறுவை சிகிச்சை, பெய்ரோனி நோய் உள்ளிட்டவற்றாலும் ஆணுறுப்பு சிறுத்துப் போகும் ஆபத்து உள்ளது. SHARE IT


