News November 4, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஆட்சியர்

மின்னல் ஊராட்சி சாலை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ.4) தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு 57 மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டையை வழங்கினார். மாவட்டம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த் ராம்குமார் ஊராட்சி மன்ற தலைவர் கோபி உடன் இருந்தனர்.
Similar News
News November 5, 2025
ராணிப்பேட்டை: 16,000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!

தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு துறை நேற்று (நவ.04) சமூக வலைதளத்தில் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 16 ஆயிரம் மாணவர்கள், ஒவ்வொரு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத் தொகை பெற்று பயன்பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.
News November 5, 2025
ராணிப்பேட்டை: TNPSC-கு இலவச பயிற்சி!!

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி II & llA ( group ll& llA) இட்ட முதன்மை எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு இன்று (05.11.2025) தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் புகைப்படம் 2 ஆதார் அட்டை நகல் 1 உடன் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
News November 5, 2025
காவல்துறை இரவு ரோந்து விவரங்கள் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று இரவு ரோந்து பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய விவரங்களை தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


