News November 4, 2025

திருவாரூர்: மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம்

image

திருவாரூர் ஆட்சியர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 0 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நாளை புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்று பயனடைய ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.4) ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில், உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News November 4, 2025

திருவாரூர்: சாலையை கடக்க முயன்றவர் பலி

image

மன்னார்குடி மேலச்சேரியை சேர்ந்த பிச்சைக்கண்ணு (78), இவர் நேற்று மாலை திருத்துறைபூண்டி மெயின் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற செந்தில்குமார் (47) என்பவர் ஒட்டி வந்த பைக் பிச்சைக்கண்ணு மீது மோதியதில், அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அங்கு வந்த கோட்டூர் போலீசார் பிச்சைக்கண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2025

திருவாரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.<>udyamimitra<<>>.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!