News April 19, 2024
அமைச்சர் மனோ தங்கராஜ் வாக்களிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த வகையில் கருங்கல் அருகே மூசாரி அரசு மேல்நிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை வாக்களித்தார்.
Similar News
News November 4, 2025
குமரி: ரூ.35,400 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News November 4, 2025
ஆரல்வாய்மொழி: கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்

ஆரல்வாய்மொழி போலீசார் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலையில் நேற்று (நவ.3) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்தவித ஆவணங்களும் இன்றி கனிமவளத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜல்லியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் திற்பரப்பஒ சேர்ந்த டிரைவர் சந்திரன்(54) என்பவரை கைது செய்து லாரி உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News November 4, 2025
குமரியில் இலவச கண்புரை சிகிச்சை நடைபெறும் இடங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இலவச கண்புரை சிகிச்சை முகாம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தெளிவான நீடித்த பார்வை கிடைப்பது மற்றும் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இந்த முகமானது நாளை அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.


