News November 4, 2025
அடுத்த வருஷம் 3 ட்ரீட்!

தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி இயக்குநராக இருக்கும் சுந்தர்.சி இயக்கத்தில் 2026-ல் 3 படங்கள் வெளிவரலாம் ✦ரஜினி- சுந்தர்.சி படம் 2026 தீபாவளிக்கு ரெடியாவதாக கூறப்படுகிறது ✦விஷால்- சுந்தர்.சி படம் 2026 சம்மரில் வெளியாகலாம் ✦நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் அடுத்த ஆண்டு வெளியாகலாம். இந்த படங்கள் திட்டமிட்டபடி வெளியானால், 2026-ல் சுந்தர்.சியின் 3 ட்ரீட் காத்திருக்கு!
Similar News
News November 5, 2025
ICC அணியில் 3 இந்திய வீராங்கனைகள்

மகளிர் உலகக் கோப்பை ஐசிசி கனவு அணியில் 3 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய வீராங்கனைகளை வைத்து இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வார்ட் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், KAPP, ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, டி கிளெர்க், சிட்றா நவாஸ் (WC), அலனா கிங், சோஃபி எக்லெஸ்டோன், சதர்லேண்ட் ஆகியோர் உள்ளனர். 12-வது ஆக நாட் ஸ்கிவர் ப்ரண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
News November 5, 2025
CBSE தேர்வு அட்டவணையில் தமிழுக்கு பாதகம்: அன்புமணி

CBSE 10-ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 2-ம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் மாணவர்களுக்கு பாதகமாகவும் அட்டவணை இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தி தேர்வுக்கு முன்னும் பின்னும் 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை இருப்பது போல, தமிழுக்கும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 5, ஐப்பசி 19 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை


